அண்மையில் நானும் எனது அலுவலக நண்பர்கள் எட்டுபேரும் ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம் செய்தோம். ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்திருந்தோம். நாங்கள் சென்றபோது மழைக்காலம் துவங்கியிருந்தது. வண்டியில் மேலே சென்று சேருவோமா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய வாரம் தான் ஒரு நாள் ரயில் குகை ஒன்றினுள் செல்லும் போது புகை அதிகமாகி ஓட்டுனர்கள் மூர்ச்சையடைந்திருந்ததாக செய்தி வெளிவந்தது.
கோவையில் இருந்து நீலகிரி விரைவு வண்டியில் மேட்டுப்பாளையம் வரை சென்று அங்கிருந்து மலை இரயிலில் குன்னூர் வழியாக உதகமண்டலம் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இறங்கிய போது காலை மணி 6:15. ஊட்டி ரயில் புறப்படும் நேரம் 7:15. துணியை இசுத்திரி போடும் கடையில் காலையில் கடையைத் திறந்தவுடம் கடைக்காரர் ஒரு சட்டியில் கரியைப் போட்டு எரியவிட்டுக் கொண்டிருப்பார். அதுபோலவே தனியாக நின்றிருந்த நீராவி எஞ்சினின் கரிப்பெட்டியில் ஒரு அம்மாள் நிலக்கரிக் குவியலில் இருந்து ஒவ்வொரு சட்டியாக கரியை எடுத்து வந்து அருகே வைத்திருந்த இரும்புப் படியின் மீதேறி அதற்குள் கரியைக் கொட்டினார். பாய்லரில் கரியை கொட்டி நெருப்பை வளர்த்துக் கொண்டிருந்தனர் இன்னும் இருவர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பியவுடன் முதல் நிலையம் கல்லாறு. அங்கு வண்டியை நிறுத்தி நீர் நிறைத்தனர். வண்டி ஐந்து நிமிடம் நின்றதால் எஞ்சின் பகுதியைப் பார்க்கச் சென்றோம். முன் புறம் ஓட்டுனர்கள் இருவர் இருந்தனர். இருவர் உடம்பிலும் இருந்து வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அவர்களு ள் ஒருவரின் கண்கள் சிவப்பேறி உலையில் எரிந்து கொண்டிருந்த பழுந்த நிலக்கரியை நினைவூட்டியது. அங்கிருந்து புறப்பட்ட வண்டி மலையில் ஏறத்தொடங்கியது. அழகிய பாலங்கள், குகைகளின் வழியாக முன்னே செல்லத் தொடங்கினோம். இடையில் ஒரு இடத்தில் இரயில் நிலையம் இல்லை எனினும் நீர் நிறைக்க ஒரு இடம் இருந்தது. அங்கு நின்று நீர் நிறைக்கப்பட்டது. அடுத்த நிலையம் இல்குரோவ் (Hill Grove). இங்கு வடையும் டீயும் கிடைத்தது. வண்டி பத்து பதினைந்து நிமிடம் நின்றது.
குன்னூர் சென்றதும் அங்கே நீராவி எஞ்சினைக் கழற்றி விட்டு டீசல் எஞ்சின் மாட்டப்பட்டு வண்டி ஊட்டி புறப்பட்டது. வழியில் அரவங்காடு நிலையத்தில் நின்ற போது அருகில் வெடிமருந்துத் தொழிற்சாலை தெரிந்தது.
ஐந்து மணிநேரத்தில் செல்ல வேண்டிய வண்டி ஆறு மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தது.
(தொடரும்)
சுவர்
Wednesday, July 21, 2010
Thursday, June 24, 2010
பாட்டிகளும் பேத்திகளும்
நகரங்கள் பெரிய இயந்திரங்களைப் போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. பேருந்தின் பொறி போல, புகையையும் சூட்டையும் கிளப்பியபடியே. ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதே இதன் வேலையாக இருக்கிறது. பஞ்சை நூலாகவும் நூலைத் துணியாகவும் மாற்றுகிறது. படிக்காதவனைக் கல்விமானாக. பெட்ரோலைப் புகையாக. மனிதனை நுகர்வோனாகவும் செய்கிறது. நகரங்களில் தான் எத்தனைவிதமான வேலைகள். காய்கறி விற்கலாம். கூடையிலும். வசதி இருந்தால் குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டிடங்களிலும். துணி விற்கலாம். வந்த துணியை தைத்துக் கொடுக்கலாம். தைத்தும் விற்கலாம். புகை பெருக்க கார் வண்டி விற்கலாம். புகை, சூட்டில் இருந்து தப்பிக்க காருக்கு ஏ.சி.யும் விற்கலாம்.
எஞ்சினின் பிஸ்டன் முன்னும் பின்னும் சென்று வருவதைப் போலவே நகரமாந்தர் வேலைக்கும் வீட்டுக்குமாய் நாள்தோறும் ஆண்டெல்லாம் ஓடவேண்டியிருக்கிறது. நகரங்களில் வசிக்கும் நாட்டின் பெரும்பாலான நடுத்தர மக்கள் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நிகழ்கால நடைவண்டியை நகர்த்தவோ அல்லது எதிர்கால குடைவண்டியைப் பெறவோ. மனிதன் மீது வைத்த நம்பிக்கையை இறைவன் இழந்துவிட வில்லை என்பதையே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நிரூபிக்கிறது என்னும் தாகூரின் வாக்குப்படி உலகில் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.
இக்குழந்தைகளை வளர்ப்பது வீட்டுவேலைக்கு வரும் ஆயாக்களோ கிரீச்(Crech)களோ அல்லது குழந்தைகளின் பாட்டிமார்களுமே. குழந்தையைப் போலவே மாறும் நிலையை நோக்கிச் செல்லும் நகரங்களில் இருவர் வேலைக்குச் செல்லும் வீட்டில் உள்ள பாட்டிகளின் முக்கியப் பொறுப்பு, பேரன், பேத்திகளைப் பார்த்துக் கொள்வது. சாலையில் நடந்துசெல்லும் போது தெருவில் பேத்திகளை இடுப்பில் ஏந்தி சாலையில் வண்டிகளை வேடிக்கை காட்டி உணவூட்டையில் மனதில் பல யோசனைகள் விரியும்.
அந்தப்பாட்டியும் தன் பேத்தியைப் போல பூப்போல சிறுகுழந்தையாக இருந்தவள்தானே. அப்போது அவளது பாட்டியும் இதுபோல் வேடிக்கை காட்டி உணவூட்டியிருப்பாளோ. என்ன வேடிக்கை காட்டியது காருக்குப் பதில் மாட்டு வண்டியாக இருந்திருக்கலாம். பாட்டி சிறுவயதில் பேத்தியைப் போலவே இருந்திருப்பாளோ. இன்றைய பேத்திகளும் வளர்ந்து பள்ளி, கல்லூரி சென்று மணமுடித்து பிள்ளை பெற்று, வளர்த்து மணமுடித்துவைத்து பாட்டியாகப் போகிறவள்தானே. பேத்தி வயதானதும் தன் பாட்டியைப் போல் இருப்பாளோ. இன்றைய பேத்தி நாளை தன் பேத்திக்கு வேடிக்கை காட்டி சோறூட்ட எத்தனையோ புதிதாக இருக்கலாம். சோறிருக்குமா என்பது தான் சந்தேகம்.
எந்தவொரு பேத்திக்கும் உயிருடனோ இல்லாமலோ ஒரு பாட்டி கட்டாயம் இருந்தாக வேண்டும். ஆனால் அவளுக்கு ஒரு பேத்தி கட்டாயம் இருப்பாள் என்று கூறவியலாது. எனினும் ஒரு பேத்தி வருவாள் என்றுதான் பக்கத்து வீட்டிலோ எதிர்வீட்டிலோ அல்லது உலகின் ஏதோவொரு மூலையின் ஒரு பாட்டியிடம் ஒரு பேரன் வளர்ந்து கொண்டிருக்கின்றான்.

Subscribe to:
Posts (Atom)